சளி, ரத்த அழுத்த பாதிப்புக்கான 52 மருந்துகள் தரமற்றவை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான 52 மருந்துகள் தரமற்று இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளையும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.

அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமி தொற்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 52 மருந்துகள் தரமற்று இருந்தது கண்டறியப்பட்டது. அதில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றிய விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் (cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in