வானிலை எச்சரிக்கை: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் 
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் 
Updated on
1 min read

எராமேசுவரம்: வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் காற்று 45 கி.மீ. முதல் 55 கி. மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் புதன்கிழமை இரவு வரையிலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் செவ்வாய்க்கிழமை ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடற்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் ஆழம் குறைந்த பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in