தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன்: அண்ணாமலை தகவல்

தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன்: அண்ணாமலை தகவல்
Updated on
1 min read

சென்னை: தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

3-வது முறையாக மோடி பிரதமராக நேற்று பதவியேற்றார். இந்நிலையில், அண்ணாமலை மத்திய அமைச்சரானால், மாநில தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது.

ஆனால், டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே பங்கேற்றார். அதேபோல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரும் பங்கேற்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்து டெல்லியில் தனியார் செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்றால், தமிழகத்தின்கட்சி பொறுப்பை கவனிப்பீர்களா என செய்தியாளர், அண்ணாமலையிடம் கேட்ட கேள்விக்கு, ‘தமிழ்நாடும் முக்கியம், எல்லாமேமுக்கியம். கட்சி தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன்’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in