“நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது” - ஓபிஎஸ் நம்பிக்கை

ஓ. பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
ஓ. பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: எனது வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில் தான் உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று (ஜூன் 02) மாலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது.

பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் நான் அல்ல. கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது.

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் நாட்டு நடப்புகளை, அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் எப்படி இந்த கட்சி சின்னா பின்னமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அது நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்கு தெரியும்” இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in