மதிமுக மீனவரணி துணைச் செயலாளராக சி.வி.செந்தில்குமார் நியமனம்

மதிமுக தலைமையகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுக தலைமையகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
Updated on
1 min read

சென்னை: மதிமுக மீனவரணி துணைச் செயலாளராக சி.வி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட வேளச்சேரி பகுதிக் கழகம், நிர்வாக வசதிக்காக வேளச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி என இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஏற்கெனவே வேளச்சேரி பகுதிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சி.வி.செந்தில்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அவர் மதிமுக மீனவரணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து வேளச்சேரி கிழக்கு பகுதிச் செயலாளராக டி.எம்.சந்திரமோகன், மேற்கு பகுதிச் செயலாளராக மறுமலர்ச்சி ச.சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தென்சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் ஜீவ அன்பு இயற்கை எய்தியால், தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ள காயல் இ.கோவிந்தராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in