Published : 19 May 2024 10:01 AM
Last Updated : 19 May 2024 10:01 AM

நூறு நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு

கோப்புப்படம்

சென்னை: தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலர் பி.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை:

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை திட்டம்) வழங்கப்படும் தினசரி ஊதியம் 1.4.2024 முதல் ரூ.294-லிருந்து ரூ.319 ஆக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதால் அதன்படி ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அக்கருத்துருவை ஏற்று 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ஏப்ரல் 1 முதல் ரூ.294-லிருந்து ரூ.319 ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x