சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணை மே 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணை மே 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Updated on
1 min read

கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி,திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மாநகர சைபர் கிரைம் போலீஸார், சவுக்கு சங்கரிடம் ஒருநாள் விசாரணை நடத்தி முடித்தனர். பின்னர் சவுக்கு சங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 4-ல் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, மீண்டும் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை மே 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in