சிவகாசி அருகே பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து: 5 பேர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து: 5 பேர் காயம்

Published on

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு உற்பத்திக்கு தேவையான அலுமினிய பவுடர் தயாரிக்கும் ஆலையில் மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி - நாரணாபுரம் சாலையில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் செட் அமைத்து பேன்ஸி ரக பட்டாசு உற்பத்திக்கு தேவையான அலுமினிய பவுடர் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

இதில் சின்ன கருப்பு 40 சதவீதம், வீரலட்சுமி 60 சதவீதம், அன்புராஜ் 35 சதவீதம், சதீஷ்குமார் 50 சதவீதம், மகேந்திரன் 30 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in