“கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானம் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்” - முதல்வர் ஸ்டாலின்

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, “கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டியவர்” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே"
"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in