

கோவை: கோவை தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறி கோவை தொகுதிக்கென தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.. அண்ணாமலை வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்:
பவர் டெக்ஸ் திட்டத்தின் கீழ் சூரிய மின் தகடுகள் அமைக்க மற்றும் சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத விசைத்தறிகளாக மாற்ற வழங்கப்படும் மானிய தொகை உயர்த்தி வழங்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும். சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க உதவி மையம் அமைக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, கணபதி, துடியலூர், லாலி ரோடு சந்திப்பு, வடவள்ளி, சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை.