

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பலாப்பழ சின்னத்தை மறந்து இரட்டை இலை சின்னத்துக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாக்குகேட்டது திகைப்பை ஏற்படுத்தியது.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த சின்னத்தை கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் ஓபிஎஸ்.
இந்நிலையில், பரமக்குடி அருகே மஞ்சூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அவர். அப்போது பேசிய ஓபிஎஸ், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மறந்துவிட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகேட்டார். இதை கேட்ட தொண்டர்கள் ஒரு நிமிடம் சற்று திகைத்து போயினர். இதனால் சலசலப்பு உண்டானது.
சுதாரித்துக்கொண்ட ஓபிஎஸ் பின்னர் பலாப்பழ சின்னத்துக்கு வாக்கு கேட்டார். அப்போது பேசியவர், ''பழக்க தோஷம், வந்துவிட்டது. என்ன பண்ணுவது" என்று கூறி சமாளித்தார்.