“எத்தனை பன்னீர்செல்வங்கள் வந்தாலும் என்னை மக்களுக்கு தெரியும்” - ஓபிஎஸ்

முதுகுளத்தூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
முதுகுளத்தூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

முதுகுளத்தூர் தொகுதி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தார். அந்நிதியை பெற்றுக்கொண்டு பாஜகவுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி.

மத்திய அரசின் துணையுடன் 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி செய்தார். பழனிசாமியின் ஆட்சி தொடர 4 ஆண்டுகள் தரை மட்டத்துக்குச் சென்று ஆதரித்தேன். தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன.

எனக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்களை தேடிப்பிடித்து களமிறக்கி உள்ளனர். எத்தனை பன்னீர் செல்வங்கள் போட்டியிட்டாலும் ஜெயலலிதாவின் ஆசியுடன் 3 முறை முதல்வராக இருந்த என்னை மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் எம்பிக்கள் ரவீந்திரநாத், தர்மர், பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், அமமுக மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in