நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக பாமஐக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி @ ஓசூர்

நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி
நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

ஓசூர்: நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது. இதனால் தமிழகத்தில் 17 தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டிடுகின்றனர். அதேபோல் அக்கட்சி சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் முனிஆறுமுகம் (51) என்பவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வேட்பாளர் முனிஆறுமுகம் கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூருக்கு காரில் வந்துக்கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர். பின்னர் காயமடைந்த முனி ஆறுமுகத்தை உடன் வந்தவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து வேட்பாளர் முனி ஆறுமுகம் கூறும்போது, “திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தருமபுரி மக்களவை தொகுதியில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கூட்டணியில் கரும்பு விவசாயிகள் சின்னத்தில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சியின் சின்னம் எங்களின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதால், காரில் கரும்பு விவசாயி சின்னத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் கோபத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் என்னை பின் தொடர்ந்து அவ்வப்போது தாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கட்சி பணிக்காக கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூருக்கு கட்சியினருடன் காரில் வந்துக்கொண்டிருந்தேன். அப்போது நாம் தமிழர் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோர் காரை பின் தொடர்ந்து வந்து வழிமறித்து எங்களது சின்னத்தில் போட்டியிடக்கூடாது எனவும் தேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் பெற வேண்டும் என கடுமையாக தாக்கிவிட்டு சென்றனர்.

பின்னர் என்னுடன் வந்தவர்கள் என்னை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கட்சி சின்னம் கிடைக்காத ஆத்திரத்தில் நாம்தமிழர் கட்சியினர் என்னை தாக்கியதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன். தற்போது இது குறித்து குருபரப்பள்ளி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in