ராசிபுரம் அருகே வாகன தணிக்கையில் ரூ.6.20 கோடி தங்க நகைகள் பறிமுதல்: வத்தலக்குண்டுவில் ரூ.3 கோடி, தக்கலையில் ரூ.1.5 கோடி நகைகள் பறிமுதல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

நாமக்கல்/வத்தலக்குண்டு/ நாகர்கோவில்/கிருஷ்ணகிரி: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ரூ.6.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி, உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம்மற்றும் பரிசுப் பொருட்கள், தங்கம்,வெள்ளி நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராசிபுரம் அருகேஉள்ள மல்லூர் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

அப்போது, சேலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடையில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு ரூ.6.20கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், கூடுதல் மதிப்பில் நகைகள் இருப்பதாக சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல்செய்தனர். உரிய ஆவணங்களின்படி நகைகள் இருந்தால், அவை திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

3.6 கிலோ தங்கம்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு-தேனி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம்இரவு நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக தேனியில் இருந்துவந்த காரை நிறுத்திச் சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி 13 பண்டல்களில், ரூ.3.09 கோடிமதிப்பிலான 3.6 கிலோ தங்கம், 500 கிராம் வெள்ளி நகைகள் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், நிலக்கோட்டை சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல, பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் இருந்து சின்னகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், சின்னகவுண்டன்புதூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர்காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.1.43 லட்சத்தைப் பறிமுதல் செய்து, பழநி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

கோவை நகைக் கடைக்கு... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகேயுள்ள புலியூர்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவுதேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்தவேனை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி தங்கம், வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த நகைகளை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள நகைக்கடையில் இருந்து, கோவையில் உள்ள மற்றொரு நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நகைகளை பெற்றுச் செல்லுமாறு வருமான வரித் துறையினர் அறிவுறுத்தினர்.

காடு வெட்டி குரு மகன்: கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை மேம்பாலம் அருகே தேர்தல்அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் கொண்டுசெல்வது தெரிய வந்தது.

மேலும், காரில் வந்தவர் அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த கனலரசு(22) என்பதும், மறைந்த காடுவெட்டி குருவின் மகன்என்பதும் தெரிந்தது. தொடர்ந்து ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணகிரி உதவி தேர்தல் அலுவலர் பாபுவிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in