தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து எதுவும் செய்யாத பட்டுக்கோட்டை எம்எல்ஏ பிரச்சாரத்துக்கு வேண்டாம்: திமுக வேட்பாளரிடம் நிர்வாகிகள் ஆவேசம்

தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து எதுவும் செய்யாத பட்டுக்கோட்டை எம்எல்ஏ பிரச்சாரத்துக்கு வேண்டாம்: திமுக வேட்பாளரிடம் நிர்வாகிகள் ஆவேசம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தங்கள் பகுதிக்கு எதுவும் செய்யாத பட்டுக்கோட்டை திமுக எம்எல்ஏவை பிரச்சாரத்துக்கு அழைத்து வர வேண்டாம் என்றுதஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளரிடம், அதிராம்பட்டினம் பகுதிதிமுக நிர்வாகிகள் ஆவேசமாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி நேற்று முன்தினம் அதிராம்பட்டினம் திமுக நகரச் செயலாளர் ராம.குணசேகரன் அலுவலகத்துக்கு ஆதரவு திரட்டச் சென்றார்.

அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சிலர், ‘‘பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, எங்கள் பகுதிக்கு தொகுதி வளர்ச்சிநிதியில் இருந்து எதுவும் செய்யவில்லை.

கட்சியில் ஒரே பகுதியாக இருந்த அதிராம்பட்டினம் நகரத்தை இரண்டாகப் பிரித்ததற்கு காரணமும் அவர்தான். எனவே, அவரை பிரச்சாரத்துக்கு அழைத்து வரக்கூடாது’’ என ஆவேசமாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

சமூக வலைதளங்களில் வைரல்: இதையடுத்து, வேட்பாளர் முரசொலி அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in