‘பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை’ - பிரேமலதா

‘பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை’ - பிரேமலதா
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்ட குழுவினர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 1-ம் தேதி சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.

அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

ஆனால், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று பிரேமலதா உறுதியாக தெரிவித்துவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in