

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோமதிவாணன், அவரது மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை போலீஸார் கடந்த ஜனவரிமாதம் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள்இருவருக்கும் ஜாமீன் கோரிஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், ``மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார்அளித்துள்ள பணிப்பெண்ணின் கல்லூரி கட்டணத்தை மனுதாரர்கள்தான் செலுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணின் பிறந்தநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்'' எனக்கூறி அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், ``அந்த பெண்ணைமிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். விரும்பிய படிப்பைக்கூடபடிக்க அனுமதிக்கவில்லை. அந்தபெண்ணிடம் வாக்குமூலம் பெற்றபிறகு இந்த வழக்கி்ல் போலீஸார்மேல் விசாரணை நடத்தவில்லை.
அதேபோல கைதாகியுள்ள நபர்களிடமும் விசாரணை நடத்தவில்லை. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் 60 நாட்களி்ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை'' என்றார்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பிரதாப், இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யப்படும், என்றார். அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற தனி மனிதஉரிமை சார்ந்த வழக்குகளில் போலீஸார் ஏன் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கின்றனர், என கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்த வழக்கில் நாளைக்குள் போலீஸார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அன்றைய தினமே ஜாமீன் மனுக்கள் மீதும் தீர்ப்பளிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.