எந்தக் கட்சியுடன் கூட்டணி? - ஜான்பாண்டியன் தகவல்

எந்தக் கட்சியுடன் கூட்டணி? - ஜான்பாண்டியன் தகவல்
Updated on
1 min read

மக்களவை தேர்தல் விவாதிக்க தமிழக மக்கள் முன்னேற்றம் கழக செயற்குழு கூட்டம் சென்னையில் தலைமை அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவர் ஜான்பாண்டியன் கூறும்போது, "தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன்பிறகு, கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அதிமுக, பாஜக என எல்லா கட்சிகளுடன் நான் நட்பாக இருக்கிறேன். 10-ம் தேதி கூட்டத்தில் இது விவாதிக்கப்படும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in