வெல்லும் ஜனநாயகம் மாநாடு வென்றது: சமூக வலைதளத்தில் திருமாவளவன் பதிவு

திருமாவளவன்
திருமாவளவன்
Updated on
1 min read

சென்னை: விசிக-வின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு வெற்றி பெற்றது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நேற்று முன்தினம் நடை பெற்றது. மாநாட்டுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கங் களில் கூறியிருப்பதாவது: சட்டமேதை அம்பேத்கர் வழியில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் அதன் அடிப்படை விழுமியங்களைக் காக்க திருச்சியில் அலைகடலென திரண்ட லட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகள். வெல்லும் ஜனநாயகம் மாநாடு வென்றது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in