வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 1.18 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 1.18 லட்சம் பேர் விண்ணப்பம்
Updated on: 
1 min read

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 21, 22-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ 1.18 லட்சம் பேரும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6ஏ-ஐ 3 பேரும், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ஐ 14,003 பேரும், திருத்தம் செய்ய படிவம் 8-ஐ 91,107 பேரும் வழங்கியுள்ளனர்.

மொத்தமாக 2 நாட்களிலும் 2.23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 1.18 லட்சம் பேர் விண்ணப்பம்
நடிகர் அர்ஜுன் மகள் குறித்து அவதூறு: பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப் பதிவு

X