Published : 01 Jan 2024 06:10 AM
Last Updated : 01 Jan 2024 06:10 AM
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப் சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.
இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த27-ம் தேதி நடைபெற்றது. இந்தபேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படாது என நன்கு தெரியும். இருப்பினும் சட்டப்பூர்வமாக கலந்து கொண்டு கோரிக்கைகளை பதிவு செய்தோம்.
அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை. வேலைநிறுத்தம் ஒன்றே இறுதி தீர்வுஎன்பதால் பணிமனைகள், பேருந்துநிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே வேலை நிறுத்தத்துக்கான ஆதரவைத் திரட்டி வருகிறோம்.
நாளை மக்கள் சந்திப்புஇயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜன.4-ம் தேதி அனைத்துமண்டலங்களிலும் வாயிற்கூட்டங்களை நடத்தி வேலைநிறுத்தம் தொடர்பாக அறிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT