Published : 21 Dec 2023 05:30 AM
Last Updated : 21 Dec 2023 05:30 AM
சென்னை: தமிழக அஞ்சல்துறை தலைவராக இருந்தவர் சாருகேசி (58). கடந்த 1965-ம் ஆண்டில் பிறந்த இவர் டெல்லியில் கல்வி படிப்பையும், மேற்கு வங்கம், கொல்கத்தா, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்தார். கடந்த1990-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறையில் சேர்ந்தார். கர்நாடகா, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் அஞ்சல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். அண்மையில், தமிழக அஞ்சல்துறை தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் திருவான்மியூர், ராதாகிருஷ்ணன் நகர், எல்ஐசி காலனி, 2-வது தெருவில் வசித்துவந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று முன்தினம் காலமானார். மறைந்த சாருகேசியின் கணவர் னிவாசன் ஆவார். சச்சிட், சிவா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு திருவான்மியூர் இல்லத்தில் இன்று (டிச.21) காலை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT