

சென்னை: குவைத் மன்னர் மறைவைத் தொடர்ந்து, மத்திய அரசு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்ததால், தலைமைச்செயலகத்தில் தேசிய கொடி நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல்சபா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மறைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குவைத் மன்னர் மறைவைத் தொடர்ந்து துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து குவைத் மன்னருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மத்திய அரசு உத்தரவின்படி சென்னை தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.