Published : 14 Dec 2023 06:16 AM
Last Updated : 14 Dec 2023 06:16 AM

சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்டுமானப் பணிக்கு விரைவில் ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.432 கோடி செலவில் 27 மாடி கட்டிடம் கட்ட ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர் மெட்ரோ ரயில், புறநகர் மற்றும் நெடுந்தொலைவு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இடையே மக்கள் எளிதாகச் சென்றுவரும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஆண்டுமார்ச் மாதம் திறக்கப்பட்டது. இது, சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இதன் அருகே 27 மாடிகட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக, 8 நிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான வாகனநிறுத்துமிடம் தயாராக உள்ளது. இதில்1,500 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 400 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,900 வாகனங்கள் நிறுத்தலாம். முன்னதாக இங்கு 33 அடுக்கு கட்டிடத்தை கட்ட முடிவு செய்திருந்தனர். பின்னர் சில காரணங்களுக்காக, அது 31மாடி கட்டிடமாக தீர்மானிக்கப்பட்டது. அதன்பிறகு, ஒரே கட்டிடத்துக்குப் பதிலாக 17 தளங்கள் மற்றும் 7 தளங்கள் என இரட்டை கோபுர கட்டிடங்களைக் கட்டலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதிலும் சிக்கல் இருந்ததால், 27 மாடிகளை கொண்ட ஒரே கட்டிடத்தைக் கட்டலாம் என இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2 கட்டிடங்கள் அமைக்கும் திட்டமே முதலில் இறுதி செய்யப்பட்டது, இருப்பினும், ஏற்கெனவே இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், 2 கட்டிடம் என்பது அதை மேலும் மோசமாக்கும் என்பதால், மாற்றுத் திட்டங்கள் யோசிக்கப்பட்டன. தற்போது, மத்திய சதுக்கப் பணிகள்சுமார் ரூ.432 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதில் 27 மாடி கொண்ட கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x