மிக்ஜாம் பாதிப்பு | எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக மார்க்சிஸ்ட் அறிவிப்பு

மிக்ஜாம் பாதிப்பு | எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக மார்க்சிஸ்ட் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in