Published : 24 Nov 2023 06:20 AM
Last Updated : 24 Nov 2023 06:20 AM
சென்னை: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, இரு கால் பாதங்களும் அகற்றப்பட்ட சிறுமிக்கு ரூ.2.86 லட்சம் மதிப்பிலான செயற்கை கால் பாதங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா என்ற 13 வயது சிறுமி, எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, இரு கால்களிலும் ரத்த ஓட்டம் தடைபட்டு கால்களின்முன்பாதங்கள் கறுத்த நிலையில்தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகும் அவரது கால்கள் குணமடையாமல், சிறுமி மிகுந்த அவதியுற்றார்.
சிறுமியின் நிலை, முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு பல்துறை மருத்துவ நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர். ரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அதனை சரி செய்து, சிறுமியின் இருகால்களின் முன்பாதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன.
இந்நிலையில், அறுவை சிகிச்சை காயங்கள் முழுவதுமாக ஆறியதால், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களை போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள் ரூ.2.86 லட்சம் செலவில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிறுமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் நேற்று வழங்கினார். இதன்மூலம், சிறுமிக்கு எளிதாகநடக்கவும், அன்றாட செயல்பாடு களை மேற்கொள்ளவும் முடிகிறது. இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியனை சிறுமி அபிநயா மற்றும்அவரது தாய் சந்தித்து நன்றி தெரி வித்தனர். இந்த நிகழ்வின்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடன் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT