போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து கழகங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது:

முக்கிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக தலைமையகங்கள் முன் 16 சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாளை (இன்று 23-ம் தேதி) காலை முதல் மாலை வரை தொடர் போராட்டம் நடத்தவுள்ளோம்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (24-ம் தேதி) சென்னை பல்லவன் சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஒரு நாள் போராட்டத்தை நடத்தவுள்ளோம். போக்குவரத்து சேவை தடைபடாதவாறு இப்போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in