தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியது: என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மறைவுக்கு மவுன அஞ்சலி

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) காலை சரியாக 10 மணியளவில் கூடியது. அவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று காலை அவை கூடியவுடன், மறைந்த மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான என்.சங்கரய்யாவின் மறைவுக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்த பின்னர் அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்துமாறு கோரினார். அதன்படி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அரசினர் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in