மதுரையில் ‘பார்க்கிங்’ பகுதியாக மாறும் சாலைகள் - பாதசாரிகள் சிரமம்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் - ஆவின் சந்திப்புக்கு இடையே உள்ள சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாடகை வாகனங்கள். 
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை அண்ணா பேருந்து நிலையம் - ஆவின் சந்திப்புக்கு இடையே உள்ள சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாடகை வாகனங்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

மதுரை: மதுரையில் சாலைகளை பார்க்கிங் பகுதியாக மாற்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். போக்குவரத்து போலீஸார் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாநகரில் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க சில பிரதான சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இதன்படி மேலமடை சிக்னல் பகுதியில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதிக்குள் செல்லும் வாகனங் கள் அனைத்தும் ஆவின் சந்திப் பில் இடதுபுறமாகத் திரும்பி சினிப்பிரியா திரையரங்கு சாலை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன.

பனகல் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அண்ணா பேருந்து நிலையப் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அரசு மருத்துவமனை பிணவறை பகுதி வழியாகச் சென்று வைகை வடகரைச் சாலையை அடைந்து சிம்மக்கல், ஆழ்வார்புரம், செல் லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றன. பனகல் சாலை, அண்ணா பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகப் பகுதி வழியாக ஆவின் சந்திப்புக்குச் செல்லும் பாதையும் திருவள்ளுவர் சிலையிலிருந்து ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

அதேநேரம், இந்தச் சாலைகளில் காலியாக இருக்கும் மற்றொரு பாதையை சாலையோர பார்க்கிங் இடமாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சிலையி லிருந்து ஆவின் சந்திப்புக்கு இடையே ஒருவழிப் பாதை யிலுள்ள பாதி சாலையில் தடுப்புச் சுவர் உள்ளது. இந்தப் பகுதியை தனியார் மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்களின் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாகப் பயன்படுத்த தொடங்கிவிட்டன. சாலையின் ஒரு பாதியில் மட்டும் வாகனங்கள் செல்வதால் கே.கே. நகர் பகுதிக்கு இடதுபுறம் திரும்பிச் செல்வதில் வாகனங்கள் சிரமத்தைச் சந்திக்கின்றன. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது.

மற்றொரு முக்கிய சாலையான கே.கே. நகர் லேக்வியூ சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பாதாள சாக்கடை பணியால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பூங்கா பகுதியில் ஒரு பாதி சாலையில் தொடர்ந்து பணி நடக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆங்காங்கே சிறிது தூரம் மட்டும் பணி முடிந்தாலும் முழுமையாக முடிக்காமல் இருப்பதால் இப்பகுதியும் தனியார் மருத்துவ மனை, வர்த்தக நிறுவனங்களின் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியிருக்கிறது.

பாதாள சாக்கடைப் பணி, ஒருவழிப் பாதை மாற்றத்தால் காலியாக இருக்கும் சாலைகள் பார்க்கிங் பகுதியாக மாற்றப்படுவது வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி, பாதசாரி களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறு கையில், கே.கே. நகர் லேக்வியூ சாலையில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். ஆவின் சந்திப்பு பகுதியில் மேம்பாலக் கட்டுமானப் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. காலியாக இருக்கும் சாலையில் தனியார் வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப் படும் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in