Published : 12 Nov 2023 06:12 AM
Last Updated : 12 Nov 2023 06:12 AM
தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்தில் மாற்றமின்றி 7,500 கனஅடியாக நீடிக்கிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 9-ம் தேதி காலை விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவாகி இருந்தது. இந்நிலையில் 10-ம் தேதி காலை விநாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. நேற்று காலை அளவீட்டின்போதும் நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாகவே நீடித்தது. கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல் காவிரியாற்றின் நீர்வரத்து அளவு மாற்றமின்றி தொடர்ந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT