சென்னையில் கொடியேற்ற அனுமதி கோரி பாஜக மனு

சென்னையில் கொடியேற்ற அனுமதி கோரி பாஜக மனு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பாஜக கொடி கம்பங்கள் நடுவதற்கு கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தால், அதை ஏற்று அனுமதி வழங்ககோரி, பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன்உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.

அந்த மனுவில், ``தமிழகத்தின் அனைத்து அரசியல்கட்சிகளின் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கிற நிலையில், பாஜக கொடிகளுக்கு மட்டும்அனுமதி மறுப்பது ஒருதலைப்பட்சமானது. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றுவதற்கு அனுமதிகடிதம் கொடுத்தும் அனுமதி கிடைக்கவில்லை. பாஜக கொடிகளை ஏற்றுவதற்கு முறையான அனுமதியை மாநகராட்சி அலுவலர்கள் வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in