Last Updated : 24 Oct, 2023 06:30 PM

1  

Published : 24 Oct 2023 06:30 PM
Last Updated : 24 Oct 2023 06:30 PM

மேட்டூர் காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகை எரித்த மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

மேட்டூர் அடுத்த கீரைக்காரனுர் காவிரி ஆற்றில் எரிந்த நிலையில் காணப்படும் மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு.

மேட்டூர்: மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர் தேக்கம் 60 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. அணையில் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் மீன் குஞ்சகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மீன் குஞ்சுகளை உரிமம் பெற்ற 2 ஆயிரம் மீனவர்களைக் கொண்டு பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அணையில் விடப்படும் மீன் குஞ்சுகளை தடை செய்யப்பட்ட ஆயவலைகளை கொண்டு பிடிப்பதை தடுத்தல், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணை நீர்தேக்க பகுதியான கீரைக்காரனுர் காவிரி ஆற்றில் கடந்த 16ம் தேதி ரோந்து பணி முடித்து விட்டு விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகை இன்று மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கீரைக்காரனூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் படகு 75 சதவீதம் எரிந்து இருந்ததை பார்த்தனர். இது குறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x