3 மாவட்ட நிறுவனங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை

3 மாவட்ட நிறுவனங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை
Updated on
1 min read

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். பொங்கலை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊருக்கு தகுந்த நேரத்தில் சென்றடைந்து அவரவர் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சீரிய முறையில் கொண்டாடும் வகையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இன்று (12-ம் தேதி) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in