நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மரணம் - தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

விஜய் ஆண்டனி | கோப்புப் படம்
விஜய் ஆண்டனி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் பார்த்து அலறியுள்ளார். இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவத்தின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in