Published : 25 Aug 2023 04:03 AM
Last Updated : 25 Aug 2023 04:03 AM
சேலம்: சேலம் - மயிலாடுதுறை புதிய தினசரி விரைவு ரயிலின் சேவை வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.
சேலம் - கரூர், கரூர் - திருச்சி, திருச்சி -மயிலாடுதுறை ஆகிய பயணிகள் ரயில்களை ஒன்றிணைத்து, சேலம் - மயிலாடுதுறை இடையே தினசரி விரைவு ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது.
இதையடுத்து, வரும் 28-ம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. ரயிலில், 10 பொதுப்பெட்டிகள் மற்றும் லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் கோச் இணைக்கப்பட்டிருக்கும். ரயிலானது, குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெருமாள் கோயில், பாபநாசம், பண்டாரவடை, அய்யம்பேட்டை, பசுபதிகோவில்,
திட்டை, தஞ்சாவூர், ஆலங்குடி, பூதலூர், அய்யனார்புரம், சோளகம்பட்டி, தொண்டமான்பட்டி, திருவெறும்பூர், மஞ்சத்திடல், பொன்மலை, திருச்சி, திருச்சி - பாலக்கரை, திருச்சி கோட்டை, முத்தரசநல்லூர், ஜியாபுரம், எலமனூர், பெட்டவாய்த்தலை, குளித்தலை, லாலாப்பேட்டை, மகாதானபுரம், சித்தலவாய், மாயனூர், வீரராக்கியம், கரூர், வாங்கல், மோகனூர், நாமக்கல், களங்காணி, ராசிபுரம், மல்லூர் வழியாக இயக்கப்படவுள்ளது.
இதன்படி, மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயிலானது (எண்.16811) காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு, கும்பகோணம் காலை 7.02 மணி, தஞ்சாவூர் 8.01 மணி, திருச்சி 9.30 மணி, கரூர் 11.43 மணி, மோகனூர் 12.04 மணி, நாமக்கல் 12.29 மணி, களங்காணி 12.42 மணி, ராசிபுரம் 12.54 மணி, மல்லூர் 1.09 மணி சேலம் ஜங்ஷனுக்கு மதியம் 1.45 மணிக்கு வந்தடைகிறது.
மறு மார்க்கத்தில், சேலம்- மயிலாடுதுறை விரைவு ரயிலானது (எண்.16812), சேலம் ஜங்ஷனில் மதியம் 2.05 மணிக்குப் புறப்பட்டு, மல்லூர் 2.19 மணி, ராசிபுரம் 2.32 மணி, களங்காணி 2.44 மணி, நாமக்கல் 2.54 மணி, மோகனூர் 3.14 மணி, கரூர் 3.38 மணி, திருச்சி 5.55 மணி, தஞ்சாவூர் 7.15 மணி, கும்பகோணம் 8.19 மணி, மயிலாடுதுறைக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடைகிறது. ரயிலில், 10 பொதுப்பெட்டிகள் மற்றும் லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் கோச் இணைக்கப் பட்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT