விஜயகாந்த் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது: மகன் விஜயபிரபாகரன் தகவல்

விஜயகாந்த் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது: மகன் விஜயபிரபாகரன் தகவல்
Updated on
1 min read

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர் களை சந்தித்த விஜயகாந்தின் மகன்விஜயபிரபாகரன், “கேப்டனின் உடல்நிலை சற்று பின்னடைவுதான். ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். அவர் நூறு வயசு வரை நன்றாக இருப்பார். ஆனால் பழையபடிவருவாரா, பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளை எடுத்து வருகிறோம். உங்களைப் போலவே நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு கேப்டன் நலமுடன் இருக்கிறார்” என்றார்.

இதற்கிடையே, விஜயபிரபாகரன் தனது ட்விட்டர் பதிவில், “கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். வழக்கம்போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கின்றன. ஆக.25-ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகக் கொண்டாடலாம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in