இலங்கை நெடுந்தீவில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை நெடுந்தீவில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்கள் கைது
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள நெடுந்​தீ​வில் கரை ஒதுங்​கிய 11 தமிழக மீனவர்​களை அந்​நாட்டு காவல் துறை​யினர் கைது செய்​தனர்.

ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து புதன்​கிழமை 400-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். இதில் ரமேஷ் என்​பவருக்​குச் சொந்​த​மான பதிவு எண் இல்​லாத விசைப்​படகு அனு​ம​திச் சீட்டு பெறாமல் நெடுந்​தீவு அருகே கரையை ஒட்டி மீன்​பிடித்து கொண்​டிருந்​த​போது தரை தட்டி பழுதடைந்​தது.

படகி​லிருந்த ரமேஷ், அமல தீபன், கெர்​சின் ரிஷப், ஹென்றி ரோகித், ஜான் ரிச்​சர்ட், வெள்​ளைச்​சாமி, அந்​தோணி ஆனந்த், ரோகன், சீமன், ஆரோக்​கிய அசோக், பெரியகருப்​பன் ஆகிய 11 மீனவர்​கள் நெடுந்​தீவு கடற்​பரப்​பில் வியாழக்​கிழமை காலை​யில் கரையேறினர். அவர்​களை நெடுந்​தீவு மீனவர்​கள் மீட்டு நெடுந்​தீவு காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

அங்கு கைது செய்​யப்​பட்ட மீனவர்​கள், யாழ்ப்​பாணம் மாவட்​டம் ஊர்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சட்ட நடவடிக்​கைக்கு உட்​படுத்​தப்பட உள்​ளனர்.

இலங்கை நெடுந்தீவில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in