Published : 18 Aug 2023 06:04 AM
Last Updated : 18 Aug 2023 06:04 AM

25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி: சென்னையில் விவசாயிகள் போராட்டம்

சென்னை பெசன்ட் நகரில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள்.

சென்னை: நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதுஉள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தமிழகத்துக்கென தனி வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைதொடங்க வேண்டும், காவிரி, முல்லை பெரியாறு உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னை பெசன்ட் நகரில் காலவரையற்ற போராட்டம் சுதந்திர தினத்தன்று தொடங்கியது.

மூன்றாம் நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோர், விவசாயிகளின் குரல்வளை நெறிக்கப்படுவதாக் கூறி, வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு பங்கேற்றனர்.

இதில் பி.ஆர்.பாண்டியன் பேசும்போது, ‘‘மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தைவிட பல மடங்கு கொடுமையான சட்டம், நில ஒருங்கிணைப்பு சட்டமாகும். இதனால் விவசாயிகளின் சுதந்திரம் பறிபோகும். எனவே, அதைதிரும்பப் பெற வேண்டும். திமுக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து, விவசாயிகளை அழிக்க நினைப்பதை ஏற்க மாட்டோம். போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்றார்.

இந்தப் போராட்டத்தில் மே -7இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், முல்லை பெரியாறு பாசனக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திருபுவன ஆதிமூலம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுப் பொதுச் செயலாளர் விகேவி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் எஸ்.தர், சென்னை மண்டலத் தலைவர் சைதை சிவா, உயர்நிலைக் உறுப்பினர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x