

சென்னை நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் தெற்கு கணேசன் வீதியில் ஒரு வீட்டில் வெளிநாட்டினர் சிலர் தங்கி இருப்பதாகவும் அவர் கள் மூட்டை மூட்டையாக எதையோ வீட்டுக்குள் தூக் கிச் செல்கிறார்கள் என்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை இரவு ஒருவர் போனில் தகவல் தெரிவித் தார். மூட்டைக்குள் துப்பாக்கி போன்ற ஆயுதங் கள் இருக்கலாம் என சந்தேகிப் பதாகவும் அவர் கூறினார். உடனடியாக இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீ ஸார் திங்கள்கிழமை இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்து உள்ளே சென்று சோதனை யிட்டனர். வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டை களை பிரித்து பார்த்தபோது சந்தனக் கட்டைகள் இருந் தன. ஆயுதங்கள் எதுவும் இல்லாததால் காவல் துறை யினர் கொஞ்சம் நிம்மதி அடைந் தனர். அங்கு பதுக்கி வைக்கப் பட்டிருந்த 145 கிலோ சந்தனக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
இவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக சுரேஷ் (31), கந்தன் (28), கணேசன் (27), லின்ஹங்க் பிங் (44), சென்சோமின் (44) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லின்ஹங்க் பிங் தைவான் நாட்டை சேர்ந்தவர். சென்சோமின் சீனாவைச் சேர்ந் தவர். சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட் டில் லின்ஹங்க் பிங் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருவது தெரியவந்தது. சிந்தாதி ரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக மீன், நண்டு போன்ற கடல் உணவு வகைகளை வாங்கி தைவா னுக்கு ஏற்றுமதி செய்யும் தொழி லில் அவர் ஈடுபட்டு வந்துள் ளார்.
சீனாவைச் சேர்ந்த சென் சோமினும், லின்ஹங்க் பிங் கும் நண்பர்கள். சென்சோ மின் சீனாவில் நறுமணப் பொருட்களை தயார் செய்யும் தொழிலில் ஈடு பட்டு வந்துள்ளார். இவர் தான், லின்ஹங்க் மூலமாக தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு சந்தனக் கட்டைகளை கடத்திச் செல்ல திட்டம் தீட்டியுள்ளார். பின்னர், லின்ஹங்கின் நெசப் பாக்கம் நண்பரான சுரேஷ், சேலத்தைச் சேர்ந்த இன்ஜினீ யரான கந்தன், குவாரி அதி பரான கணேசன் ஆகி யோர் மூலமாக ஆந்திரா வில் இருந்து சென் னைக்கு லாரியில் சந்தன கட்டைகள் கடத்தி வரப் பட்டுள்ளன. அந்த கட்டை களை கார் மூலம் நெசப் பாக்கத்துக்கு கொண்டு வந்து பதுக்கி வைத்துள் ளனர்.
சந்தன கட்டைக ளால் செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவில் மவுசு அதிகம். இதனால் இங்கிருந்து குறைந்த விலைக்கு சந்தனக் கட்டைகளை வாங்கிச் சென்று தனது தொழிலை விரிவு படுத்த சென்சோமின் திட்ட மிட்டு செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. மீன்களு டன் சேர்த்து சந்தனக் கட்டை களையும் திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.