‘இந்தியாவை பீடித்துள்ள பிணியை அகற்றுவோம்’ - முதல்வர் ஸ்டாலின் உறுதி

‘இந்தியாவை பீடித்துள்ள பிணியை அகற்றுவோம்’ - முதல்வர் ஸ்டாலின் உறுதி
Updated on
1 min read

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், ‘மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலை உயர்வு என 9 ஆண்டுகளாக இந்தியாவை பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும்,வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்’ என தெரிவித்துள்ளார்.

சுதந்திர உரையின்போது அவர், ‘‘மக்களுக்கு நேரடி தொடர்பு கொண்ட அனைத்தும், குறிப்பாக கல்வி, மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற முடியும் ’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in