கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன், த/பெ. சரவணன் (வயது 10) மற்றும் யோகேஸ்வரன், த/பெ.கணேஷ் (வயது 8) ஆகிய இரண்டு சிறுவர்களும் நேற்று (3-8-2023) மதியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in