108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்​கள் அலு​வல் நேரத்​தில் அரசி​யல் விவாதங்​களில் ஈடு​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் இ.எம்​.ஆர்​.ஐ. கிரீன் ஹெல்த் சர்​வீஸ் நிறு​வனம் மூல​மாக 108 ஆம்​புலன்ஸ் சேவை செயல்​படுத்​தப்​படு​கிறது.

மாநிலம் முழு​வதும் மொத்​த​மாக 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஆம்புலன்ஸ் வாக​னங்​கள் அனைத்​தி​லும் தேர்​தல் கட்​டுப்​பாட்டு விதி​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன.

இது தொடர்​பாக 108 நிர்​வாகத்​தின் மாநிலத் தலை​வர் செல்​வகு​மார், மண்​டலத் தலை​வர் முகமது பிலால் ஆகியோர் கூறிய​தாவது: தேர்​தல் காலத்​தில் ஆம்புலன்ஸ் வாக​னங்​களில் மருத்​துவ உபகரணங்​கள் தவிர வேறு எதை​யும் எடுத்​துச் செல்ல அனு​ம​தி​யில்​லை.

அனு​மதி இல்​லாத எவரும் ஆம்​புலன்​ஸில் ஏறக் கூடாது. அங்​கீ​காரம் பெற்ற ஊழியர்​கள், தமிழக அரசு மற்​றும் காவல் துறை அதி​காரி​கள், தேர்​தல் கண்​காணிப்​பாளர்​கள் மட்​டுமே ஆம்புலன்ஸ் வாக​னங்​களை ஆய்வு செய்ய வேண்​டும்.

நோயாளி அல்​லது அவருடன் வரும் நபர்​கள் ஆம்​புலன்​ஸில் உள்ள பெட்​டிகள், உபகரணங்​களை திறக்​காமல் இருப்​பதை கண்​காணிக்க வேண்​டும். ஆம்​புலன்​ஸில் வரு​வோர் தேர்​தல் தொடர்​பான பொருள்​களை வைத்​திருந்​தால் அவற்றை அனு​ம​திக்​கக்​கூ​டாது.

நோயாளி மற்​றும் அவருடன் வரும் நபர்​கள் வைத்​திருக்​கும் பணம் பற்​றிய விவரத்தை ஆவணத்​தில் பதிவு செய்ய வேண்​டும். பணி நேரத்​தில் கட்​சிகள் மற்​றும் சின்​னங்​கள் சார்ந்த பொருள்​களை வைத்​திருக்​கக் கூடாது.

ஆம்​புலன்​ஸில் தேர்​தல் பிரச்​சார ஸ்டிக்​கர்​கள் அல்​லது சின்​னங்​களை ஒட்​டக்​கூ​டாது. அலு​வல் நேரத்​தில் அரசி​யல் விவாதங்​களில் ஈடு​படு​வதற்கு ஊழியர்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தல் பிரச்​சார பொருட்​கள் உள்ள இடங்​களுக்கு அருகே அவசர சேவை வாக​னங்​களை நிறுத்​தக்​கூ​டாது.

ஆம்புலன்ஸ் நிர்​வாகத்​தின் முன் அனு​மதி இல்​லாமல் நோயாளி​யின் புகைப்​படம் அல்​லது வீடியோ எடுக்க அனு​ம​திக்​கக்​கூ​டாது என பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதித்​துள்​ளோம். இதனை மீறி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மாதம் ரூ.40,000 உதவித் தொகையுடன் பிஎச்டி, எம்எஸ் படிப்புகளுக்கு சேர்க்கை அண்ணா பல்கலை. அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in