மாதம் ரூ.40,000 உதவித் தொகையுடன் பிஎச்டி, எம்எஸ் படிப்புகளுக்கு சேர்க்கை அண்ணா பல்கலை. அறிவிப்பு

மாதம் ரூ.40,000 உதவித் தொகையுடன் பிஎச்டி, எம்எஸ் படிப்புகளுக்கு சேர்க்கை அண்ணா பல்கலை. அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் பதி​வாளர் வி.குமரேசன் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: அண்ணா பல்​கலைக்​கழக துறை சார்ந்த கல்​லூரி​களான கிண்டி பொறி​யியல் கல்​லூரி, அழகப்பா தொழில்​நுட்ப கல்வி நிறு​வனம், குரோம்​பேட்டை எம்​ஐடி, கட்​டிடக்​கலை, திட்​ட​மிடல் கல்​லூரி மற்​றும் அரசு பொறி​யியல் கல்​லூரி​களில் பிஎச்​டி, எம்​எஸ் ஆராய்ச்சி படிப்​பு​களில் (பொறி​யியல், தொழில்​நுட்​பம், மேலாண்​மை, கட்​டிடக்​கலை, கலை அறி​வியல் பாடங்​கள்) சேர விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

கல்​லூரி​களில் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​கள், தொழில்​துறை​யில் பணி​யாற்​று​வோர், முது​நிலை பட்​ட​தா​ரி​கள் இதற்கு விண்​ணப்​பிக்​கலாம். மொத்​தம் 250 ஆராய்ச்சி மாணவர்​களுக்கு மாதம்​தோறும் ரூ.40 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும்.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு வரும் 28-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்​யப்​பட்ட ஆன்​லைன் விண்​ணப்ப படிவத்தை தேவை​யான சான்​றிதழ்​களு​டன் ஏப்​ரல் 4-ம் தேதிக்​குள் பல்​கலைக்​கழகத்​துக்கு அனுப்ப வேண்​டும். கூடு​தல் விவரங்​களை www.cfr.annauniv.edu என்ற இணை​யதளத்​தில்​ தெரிந்​துக்​ கொள்​ளலாம்​. இவ்​​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மாதம் ரூ.40,000 உதவித் தொகையுடன் பிஎச்டி, எம்எஸ் படிப்புகளுக்கு சேர்க்கை அண்ணா பல்கலை. அறிவிப்பு
320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை கொடுத்துவிட்டு 1,071 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொய்: ராமதாஸ், அன்புமணி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in