ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த துணை நடிகர் மோகன்: கமலுடன் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தவர்

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த துணை நடிகர் மோகன்: கமலுடன் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தவர்
Updated on
1 min read

மதுரை: கமலின் 'அபூர்வ சகோதரர்' படத்தில் நடித்த துணை நடிகர் மோகன் வறுமையால் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்தார்.

சேலம் மாவட்டம், மேட்டுரைச் சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன்(60). திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். கமல்ஹாசன் நடிப்பில் 1989-ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்புவின் (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். மேலும், ‘நான் கடவுள்’, ‘அதிசய மனிதர்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதிக்கு சில ஆண்டுக்கு முன்பு வந்தார். அங்கே வறுமை காரணமாக பெரிய ரத வீதியில் அவர் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 31) பெரிய ரத வீதியில் மோகன் ஆதவற்ற நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீஸார் மோகனின் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேட்டூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மோகனுக்கு 2 சகோதார்கள், 3 சகோதரிகள் உள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in