தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்
Updated on: 
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், இன்று முதல் ஆக. 4-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in