பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை; ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு பேருந்து: ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது

பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை; ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு பேருந்து: ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
Updated on
1 min read

சென்னை: கிராமப்புற ஏழை மகளிரின் வசிப்பிடங்களுக்கே சென்று புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கு வசதியாக வடபழனி ரோட்டரி சங்கம் ரூ.2.6 கோடி மதிப்பிலான ஒரு பேருந்தையும், மருத்துவக் கருவிகளையும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. அதில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மேமோகிராம் கருவியும், அல்ட்ரா சவுண்ட்கருவியும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பேப்ஸ்மியர் பரிசோதனை வசதிகளும் உள்ளன.

அந்த பேருந்தின் மூலம் மருத்துவர்களும், மருத்துவ ஆய்வக நுட்பநர்களும், தமிழக கிராமங்களுக்கு நேரில் சென்று ஏழை மகளிருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.

முன்னதாக, கமலம் உடையார்எனப் பெயரிடப்பட்ட அந்த புற்றுநோய் பரிசோதனை பேருந்தின் சேவையை மாநில சமூகநல ஆணையர் அமுதவல்லி, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் மருத்துவர் உமா சேகர், ரோட்டரிசங்கத்தின் பன்னாட்டு இயக்குநர்அனிருத் ராய் சவுத்ரி மற்றும் ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் நந்தகுமார்தொடக்கி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in