

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரிடர் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறும்போது, "சென்னைக்கு மின்சார விநியோகம் செய்யும் துணைமின் நிலையங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை சேக்கரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்" இவ்வாறு சத்யகோபால் கூறியுள்ளார்.