மருத்துவ மாணவர் கல்விக் கட்டணம்: முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

எம்.எச்.ஜாஹிருல்லா | கோப்புப் படம்
எம்.எச்.ஜாஹிருல்லா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜாஹிருல்லா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் 15 சதவீதம் அகில இந்திய கலந்தாய்வு மூலமாகவும், 85 சதவீதம் மாநில அரசு் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. நீட் தேர்வு மூலம் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களில் பெரும்பாலானோர், அகில இந்திய கலந்தாய்வில் தங்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை.

இந்த கலந்தாய்வு தொடர்பான ஒதுக்கீடு குறித்து சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாததே இதற்கு காரணம். இதனால் அகில இந்திய கலந்தாய்வு மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், வெளி மாநிலத்தவரே அதிக இடங்களில் சேர்ந்து, பயின்று வருகின்றனர். அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களும் 85 சதவீத மாநில அரசு் ஒதுக்கீட்டில் தான் இடங்களை பெற முயல்கின்றனர்.

எனவே, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த தமிழக மாணவர்களை, அகில இந்திய கலந்தாய்வு அடிப்படையில், சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, அகில இந்திய கலந்தாய்வின் மூலம் பயிலும் மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தைத், தமிழக அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in