தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக உள்ள அருண் ராய் ஐஏஎஸ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான தேவ் ராஜ் ஐஏஎஸ், அறிவியல் நகரத் திட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு இணை செயலாளரான ஆகாஷ் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்த நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in