நிலக்கோட்டையில் கிடா முட்டு போட்டி: ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட கிடாய்கள்

நிலக்கோட்டையில் கிடா முட்டு போட்டி: ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட கிடாய்கள்
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று (ஜூலை 15) கிடா முட்டு போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம், மட்டப்பாறை கிராமத்தினர் சார்பில் நடைபெற்ற கிடா முட்டு போட்டியை நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். திண்டுக்கல், மதுரை, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன. இதில் 2 முதல் 5 வயது வரையிலான கிடாய்கள் என வயது வாரியாக நடந்த போட்டியில் கிடாய் ஜோடிகள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. 75 முட்டுக்கள் இலக்காக கொண்டு போட்டி நடைபெற்றது.

அதிக முட்டுக்கள் முட்டி வெற்றிப் பெற்ற கிடாய்களுக்கு பித்தளை பாத்திரங்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. இப்பகுதியில் முதன் முறையாக நடந்த கிடா முட்டு போட்டியை நிலக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளானோர் கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் மாயாண்டி, இளம்பரிதி ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in